அதிகரிக்கும் கரோனா: கர்நாடகத்தில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கரோனா பரவல் குறித்து மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை; அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

கர்நாடகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், மாநிலத்திலுள்ள மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து, அதிகாரிகள், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர்களுடன் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சரண் பிரகாஷ் இன்று (மே 27) ஆலோசனை மேற்கோண்டார்.

இதனைத் தொடந்து செய்தியாளர்களுடன் அமைச்சர் சரண் பிரகாஷ் பேசியதாவது,

''நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், பொதுமக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை. கர்ப்பிணிப் பெண்கள், மூத்தக் குடிமக்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். கரோனாவை எதிர்கொள்ள அரசு தயாராகவுள்ளது. மக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பவுள்ளனர். குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். பள்ளியில் இந்த அறிகுறிகள் மாணவர்களிடையே தென்பட்டால், பள்ளி நிர்வாகமும் உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி பெற்றோரிடம் அறிவுறுத்த வேண்டும்.

மருத்துவக் கல்லூரி இயக்குநர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினோம். இதில், கரோனா பரிசோதனைக்கான அனைத்து வசதிகளையும் மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளேன்.

கரோனா பரவலைக் கண்காணிக்க சோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு மண்டலவாரியாக பரிசோதனை நடத்தப்படுகிறது. ஆக்ஸிஜன் படுக்கை மற்றும் வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ள மருத்துவமனைகளின் தரவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து பெய்து வரும் மழையும், பருவகால காய்ச்சல்களை உருவாக்குகின்றன. இதனால், தொற்று காய்ச்சல் வேறுபாடுகளைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | 2026 இறுதிக்குள் நாட்டின் ஏற்றுமதி 1 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com