பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

2026 இறுதிக்குள் நாட்டின் ஏற்றுமதி 1 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும்!

2026 நிதியாண்டின் இறுதிக்குள் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 1 டிரில்லியன் டாலராக உயரும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :27 மே 2025, 6:25 pm IST

2026 நிதியாண்டின் இறுதிக்குள் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 1 டிரில்லியன் டாலராக உயரும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் வணிகப் பொருள்கள் ஏற்றுமதி மட்டும் 525 முதல் 535 பில்லியன் டாலராக இருந்தது. அதாவது முந்தைய ஆண்டை விட இது 12% அதிகமாகும். இதேபோன்று சேவைத் துறை சார்ந்த ஏற்றுமதிகள் 465 முதல் 475 பில்லியன் டாலராக இருந்தது. இது 20% வளர்ச்சியாகும்.

2024 - 25 நிதியாண்டில் ஏற்றுமதி துறையில் இந்தியா குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்த நிதியாண்டில் மட்டும் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு 824.9 பில்லியன் டாலராக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இது 778.1 பில்லியனாக இருந்தது. இது 6.01% உயர்வாகும்.

2025 நிதியாண்டில் மட்டும் சேவைத் துறை சார்ந்த ஏற்றுமதிகள் 13.6% அதிகரித்து 387.5 பில்லியனாக உள்ளது. தொழில்நுட்பத் துறை, தொழில் துறை, நிதி பயணங்கள் தொடர்பான சேவைகளின் சிறந்து விளங்கியமையால் சேவைத் துறையில் ஏற்றம் காணப்பட்டுள்ளது.

வணிக பொருள்கள் ஏற்றுமதி 437.4 பில்லியன் டாலர் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோலியப் பொருள்கள் அல்லாத சரக்குகள் ஏற்றுமதி 374.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 6% உயர்வாகும்.

சரக்கு மற்றும் சேவைகள் துறை ஏற்றுமதியில் நாடு தொடர்ந்து நிலையான வளர்ச்சியை எட்டி வருவதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சி. ரால்ஹன் தெரிவித்தார்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தயாரிப்புப் பொருள்களின் வாழ்க்கை சுழற்சி மேலாண்மை அமைப்பை ஏற்றுக்கொள்ளும் வகையிலான வழிகாட்டுதல்களை அரசு செய்துகொடுத்தால், உள்நாட்டுத் தயாரிப்புகள் மேலும் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.