
ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் என்ற சந்தேகத்தின்பேரில், ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷாகுர் கான் என்பவரை, புலனாய்வுத் துறையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஷாகுர் பணியாற்றி வந்த நிலையில், அவரது செல்போனில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களின் செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக, ஷாகுர் கானுக்கு எதிராக சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த ஆதாரங்களைக் கொண்டு, அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில்தான், புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
அவர் ஜெய்ப்பூர் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.