
மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 84 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் சூழலில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் புதியதாக 84 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதன்மூலம், நிகழாண்டில் அம்மாநிலத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 681 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, மகாராஷ்டிரத்தில் 467 பேர் கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் மும்பை நகரத்தில் மட்டும் கடந்த ஜனவரி முதல் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 411 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரும்பாலான கரோனா நோயாளிகளிடம் லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும், அதனால் மக்கள் பதற்றமடையத் தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் மகாராஷ்டிரத்தில் சுமார் 10,324 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 681 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், நிகழாண்டில் கரோனா தொற்றினால் அங்கு சுமார் 7 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பயங்கரவாதிகளை பாகிஸ்தானே அழிக்க வேண்டும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.