துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி! - பிரதமர் மோடி

துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி தரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேசியிருப்பதைப் பற்றி..
பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி.
Published on
Updated on
1 min read

துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி தரப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் நடைபெற்ற 18 ஆம் நூற்றாண்டின் மால்வா ராஜ்ஜியத்தின் புகழ்பெற்ற ராணி லோகமாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “பாகிஸ்தான் மறைமுகமாகப் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதை, இனி இந்தியா ஒருபோதும் பார்த்துக் கொண்டு இருக்காது. பாகிஸ்தான் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலுக்கு பதில் தாக்குதல் திருப்பிக் கொடுக்கப்படும்.

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவால் நடத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை ஆப்ரேஷன் சிந்தூர். நமது ஆயுதப் படைகள் பல கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த பயங்கரவாதிகளை அவர்களின் இடத்திலேயே தாக்கி அழித்தனர். இதை பாகிஸ்தான் ஒருபோதும் கனவில்கூட நினைத்திருக்காது.

140 கோடி இந்தியர்களின் முதல் தீர்மானம். பாகிஸ்தானின் ஒவ்வொரு துப்பாக்கித் தோட்டாக்களுக்கு நம்மிடமிருந்து பீரங்கி குண்டுகளால் பதிலடி தரப்பட்டுள்ளது.

சிந்தூர்(செந்தூரம்) இந்தியக் கலாசாரத்தில் ஒருங்கிணைந்தது. இது பெண்களின் வீரத்தைக் குறிக்கிறது. ராமரின் மீது தீவிர பக்தி கொண்ட ஹனுமான் தன் மீது பூசிக்கொண்டதும் செந்தூரம்தான். பூஜைகளின் போது சிந்தூர் வழங்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் வீரத்தின் அடையாளமாக சிந்தூர் மாறியுள்ளது.

பஹல்காம் தாக்குதல் நமது வளமான நாட்டின் அமைதியை சீர்குலைப்பதாக இருந்தாலும், எதிரிகளை அவர்களின் இடத்திலேயே அழித்துவிட்டோம்.

நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி, எல்லை தாண்டிய நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி, நமது நாட்டின் பெண்கள் பாதுகாப்பின் ஒருங்கிணைந்த கேடயமாக உள்ளனர்.” எனத் தெரிவித்தார்.

அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அஞ்சலி செலுத்தும் வகையில், அஞ்சல் தலை மற்றும் ரூ.300 மதிப்புள்ள நினைவு நாணயத்தையும் வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

இதையும் படிக்க: இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன! முப்படை தலைமைத் தளபதி ஒப்புதல்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com