

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்றபோது 45 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து பஷிர்ஹத் காவல் கண்காணிப்பாளர் ஹூசைன் மெஹெதி ரஹமான் கூறுகையில், எந்த முறையான ஆவணங்களும் இல்லாமல் வங்கதேசத்திற்குள் நுழைய முயன்றபோது ஊடுருவல்காரர்களை ஹக்கிம்பூரில் பிஎஸ்எஃப் வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.
கைது செய்யப்பட்ட வங்கதேசத்தவர்களில் 15 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் இருந்தனர்.
பின்னர் அவர்களை போலீஸாரிடம் பிஎஸ்எஃப் ஒப்படைத்தது. விசாரணையில் அவர்கள் கொல்கத்தா மற்றும் ரஜர்ஹத் பகுதியில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து கைதானவர்கள் பஷிர்ஹத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.
இதனிடையே ஒரு நாளைக்கு முன்பு மாவட்டத்தில் நான்கு குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பிடித்து ஸ்வரூப் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.