

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் கைவிடப்பட்ட வீட்டில் இருந்து நான்கு நாட்டு வெடி குண்டுகள் மீட்கப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
பௌராவில் உள்ள பள்ளிக்கு அருகே வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், குறைந்த தீவிரம் கொண்டதாகக் கூறப்படும் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர்கள் மேலும் கூறினர்.
சிந்திரி துணைப்பிரிவு காவல் அதிகாரி அசுதோஸ் குமார் சத்யம் கூறுகையில், "ரகசிய தகவலைத் தொடர்ந்து, கைவிடப்பட்ட வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு அறையில் இருந்து நான்கு குண்டுகள் மீட்கப்பட்டன.
பின்னர் அவை ஒரு தண்ணீர் கேனில் போட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக உள்ளூர் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாங்கள் விசாரித்து குண்டுகளை வைத்திருந்த நபர்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். குற்றவாளிகள் இப்பகுதியில் ஒரு பெரிய சம்பவத்தை செய்ய திட்டமிட்டுள்ளார்களா என்பதையும் நாங்கள் கண்டறிய முயற்சிக்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.