ஜார்க்கண்டில் தொழிலதிபர் சுட்டுக்கொலை

ஜார்க்கண்டி தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதிப் படம்
பிரதிப் படம்
Published on
Updated on
1 min read

ஜார்க்கண்டி தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலியானவர் மக்பூல் ஷேக் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், பகூர் முஃபாசில் காவல் நிலையத்தின் கீழ் உள்ள லகான்பூர் கிராமத்தில் வசித்து வந்தார்.

பகூர் முஃபாசில் காவல் நிலை அதிகாரி கௌரவ் குமார் கூறுகையில், "இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. மக்பூல் ஷேக்கை, லாலன் ஷேக் சுட்டுக் கொன்றார்.

உடனே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த மக்பூல் மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் பலியானதாக அறிவிக்கப்பட்டது."

பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பாக அவர்களுக்கு இடையே நீண்டகாலமாக தகராறு இருந்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் சனிக்கிழமை தெவித்தனர்.

முதல்வராகும் வாய்ப்பை யாராவது விட்டுக் கொடுப்பார்களா? செங்கோட்டையனுக்கு திண்டுக்கல் சீனிவாசன் பதில்

லாலன் ஷேக் வீட்டின் அருகிலுள்ள தேநீர் கடையில் இருந்து மக்பூல் வீடு திரும்பும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Summary

 A 45-year-old businessman was shot dead in Jharkhand's Pakur district, police said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com