

மகாராஷ்டிரத்தின் லத்தூர் மாவட்டத்தில் விவசாய நிலத்தில் இருநது 8 அடி நீள முதலை பிடிபட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
முன்னதாக, அகமதுபூர் வட்டத்தில் உள்ள கேந்திரேவாடி, தலேகான் மற்றும் அந்தோர் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அருகிலுள்ள ஆற்றில் இருந்து வழிதவறி வந்த முதலையைக் கண்டதும் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத் துறையைச் சேர்ந்த குழுவினர் கடந்த இரண்டு நாள்களாக அந்த முதலையை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கேந்திரேவாடியில் இருந்து சுமார் 100 கிலோ எடையுள்ள முதலையைப் பிடித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த காட்சி அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடையே அச்சத்தைத் தூண்டியதாக அவர் மேலும் கூறினார்.
கிராமவாசி சர்பஞ்ச் ஸ்ரீகாந்த் ரோஹிதாஸ் கர்பாரி கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த முதலை ஆற்றில் காணப்பட்டதாகவும், ஆனால் அதைப் பிடிக்க முடியவில்லை.
இப்போது நீர் மட்டம் குறைந்துவிட்டதால், முதலை தென்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.