என் குடும்பத்துக்கு எதுவும் செய்ததில்லை... வாக்காளர்களுக்கு விடியோ வெளியிட்ட நிதீஷ் குமார்!

என் குடும்பத்துக்கு எதுவும் செய்ததில்லை என்று வாக்காளர்களுக்கு விடியோ வெளியிட்டுள்ளால் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்.
நிதீஷ் குமார்
நிதீஷ் குமார் கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், வாக்காளர்களின் நெஞ்சை உருக்கும் வகையிலான விடியோ ஒன்றை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இன்று வெளியிட்டுள்ளார்.

2005ஆம் ஆண்டு முதல் ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆதரவு அளித்து வந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விடியோவை அவர் வெளியிட்டிருந்தாலும், வரும் தேர்தலில் தங்களுக்கு அதிகப்படியான வாக்குகளை அளிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் லாலு பிரசாத் யாதவ், குடும்ப ஆட்சி நடத்தியதாகவும், இதுவரை என் குடும்பத்துக்காக தான் எதுவுமே செய்ததில்லை என்றும் அவர் உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் விடியோவில், முந்தைய ஆட்சி முறை மிகக் கடுமையாக இருந்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், எனது அன்புக்குரிய பிகாரின் சகோதர சகோதரிகளே, என்னை, 2005ஆம் ஆண்டு முதல் பிகார் மக்களுக்காக உழைக்க நீங்கள்தான் வாய்ப்புக் கொடுத்தீர்கள். எப்போது என்னிடம் பிகார் ஆட்சி கிடைத்ததோ, அப்போது, பிகாரியாக இருப்பது அவமானத்துக்குரியதாகவே இருந்தது. அதுநாள் முதல் நான் இரவு பகலாக கடும்பணியாற்றி, முழு நேர்மையுடன் இருந்து வந்துள்ளேன்.

கல்வி முதல் சுகாதாரம், வேளாண்மை, இளைஞர் நலன் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்தினோம்.

இதற்கு முன்பு இருந்த ஆட்சியைப் பற்றி உங்களுக்கே தெரியும், நிலைமை மிக மோசமாக இருந்தது. முதலில், அவர்கள் பாழ்படுத்திச் சென்றதை மீட்கவே பணியாற்ற வேண்டியதாக இருந்தது. அதனுடன் சேர்த்து பிற துறைகளின் முன்னேற்றங்களில் கவனம் செலுத்தினோம். இன்று பல துறைகளில் நாம் முன்னேறியிருக்கிறோம்.

பிகாரின் முதல்வராக இருந்த லாலு, மாநிலத்துக்காக எதுவுமே செய்யவில்லை. வெறும் குடும்ப அரசியல் மட்டும்தான் செய்துகொண்டிருந்தார்.

முந்தைய அரசு பெண்களுக்காக எதையும் செய்யவில்லை. தற்போது நாங்கள் பெண்களுக்காக பாடுபட்டு வருகிறோம். அவர்கள் யாரையும் சாராமல் வாழ வழிவகை ஏற்படுத்தி வருகிறோம். இந்துவாக இருந்தாலும் சரி முஸ்லிமாக இருந்தாலும் சரி, அனைவருக்காகவும் பாடுபட்டு வருகிறோம். நான் என் குடும்பத்துக்காக எதையும் செய்ததில்லை. தற்போது, பிகாரியாக இருப்பது அவமரியாதைக்குரியது அல்ல, மரியாதைக்குரியது என்ற அளவில் மாற்றியிருக்கிறோம்.

மாநிலம் வளர்ச்சியடைய பிரதமர் மோடிக்கு ஆதரவு அளியுங்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுங்கள். மேலும் உங்களுக்காகப் பணியாற்றுவோம். முன்னணி மாநிலமாக வளர்ச்சியடைவதைப் பார்க்கலாம். நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் வாக்குப் பதிவு மையங்களுக்கு வந்து தவறாமல் வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Summary

Bihar Chief Minister Nitish Kumar released a video to voters saying he had done nothing to his family.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com