

நாடு முழுவதும் கடந்த அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.95 லட்சம் கோடி வசூலாகியுள்ளன.
மத்திய நிதியமைச்சகம் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று, நாடு முழுவதும் அதற்கு முந்தைய மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது.
அந்தவகையில், அக்டோபர் மாதம் வசூலான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதத்தில் ரூ. 1.89 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் அக்டோபர் மாதத்தில் 4.6 சதவீதம் அதிகரித்து ரூ.195.936 கோடியாக உயர்ந்துள்ளது.
இது கடந்தாண்டு 2024 அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 9 சதவீதம் அதிகம். தொடர்ச்சியாக கடந்த 10 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியைத் தாண்டி வருகிறது.
இதனிடையே ஜிஎஸ்டி முறை மாற்றப்பட்டு, இரு விகித (5%, 18%) முறை கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான பொருள்களின் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.