

ஜெட்டாவிலிருந்து ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் விமானம் மும்பையில் தரையிறங்கியது.
சௌதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து சனிக்கிழமை காலை 5.30 மணியளவில் இண்டிகோ விமானம் ஹைதராபாத் புறப்பட்டது. ஆனால் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த மின்னஞ்சலால் பரபரப்பு நிலவியது. அதில், ஹைதராபாத்தில் விமானம் தரையிறங்குவதை தடுக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள், ஐஎஸ் பயங்கரவாதிகள் விமானத்தில் பயணிப்பதாகவும், 1984ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலைப் போன்று ஹைதராபாத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டு அங்கு பாதுகாப்பாக தரையிறங்கியது. உடனே விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் முழுமையான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அனைத்துப் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எந்தப் பிரச்னையும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.