பிரதமர் பேசியதை திமுகவினர் மடைமாற்றி வருகிறார்கள்: நயினார் நாகேந்திரன்

பிகார் மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதாக திமுகவினர் திரும்பத் திரும்ப பொய் கூறி வருகிறார்கள்.
திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் நயினார் நாகேந்திரன்.
திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் நயினார் நாகேந்திரன்.
Published on
Updated on
1 min read

பிகார் மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதாக திமுகவினர் திரும்பத் திரும்ப பொய் கூறி வருகிறார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அங்கம் வகிக்கிறது. அவர்கள் கட்சிப் பிரச்னையில் நான் எந்த கருத்தும் கூற முடியாது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சிலர் அதிகமான தொகுதிகளைக் கேட்கிறார்கள், சிலர் ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். அது வேறு விஷயம்.

எங்களுக்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை சுதந்திரமான அமைப்புக்கள். அவற்றுக்கும் பா.ஜ.க விற்கும் எந்த சம்மதமும் கிடையாது. ஆளுங்கட்சியாக திமுக இருக்கும்போது அவர்கள் அமைச்சருக்கு எதிராகவே எப்படி வழக்கு பதிவு செய்வார்கள்.

கரூரில் 41 பேர் இறந்தபோதும் அதற்கு சம்மந்தப்பட்டவர்களை காப்பாற்றவே முயற்சி செய்தார்கள். அதே போல கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திலும் அதற்கு தொடர்புடையவர்களை காப்பாற்றவே இந்த அரசு முயற்சி செய்தது. தமிழ்நாட்டில் வசிக்கும் பிகார் மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதாக திமுகவினர் திரும்பத் திரும்ப பொய் கூறி வருகிறார்கள்.

மகாராஷ்டிரம்: விவசாய நிலத்தில் இருந்து பிடிபட்ட 8 அடி நீள முதலை

பிகார் மக்களை வந்தேறிகள் என்றும் பாணி பூரி விற்பதற்காக வந்துள்ளார்கள் என்றும் முதல்வர், அமைச்சர்களே பேசி உள்ளார்கள். திமுகவினர் இவ்வாறு பேசியதாக பிரதமர் பேசியதை திமுகவினர் மடைமாற்றி வருகிறார்கள். மொழி வாரியாக மாநிலத்தை பிரித்தாலும் சூழ்ச்சியை திமுக தொடங்கியுள்ளது.

மக்கள் இதை புரிந்து கொள்வார்கள் மக்கள் மனமாற்றத்திற்கு தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

BJP state president Nainar Nagendran has said that the DMK is repeatedly lying about PM Modi's speech about the people of Bihar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com