

பிகாரில் தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில் சிறிது நேரம் ஒதுக்கி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீன்பிடிக்கச் சென்றார்.
பிகார் சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி தலைவர்கள் பிகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில தேர்தல் பிரசாரத்திற்கு இடையே சிறிது நேரம் ஒதுக்கி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீன் பிடிக்கச் சென்றார்.
பெகுசரை மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் முடிந்த பிறகு அவர் மீன்பிடிக்கச் சென்றார். ராகுல் காந்தி ஒரு படகில் ஏறி குளத்தின் நடுவில் சென்றார்.
அவருடன் மாநில முன்னாள் அமைச்சர் முகேஷ் சாஹ்னி சென்றிருந்தார். அந்த இடத்தில் பல மீனவர்கள் இருந்தனர்.
ராகுல் காந்தியுடன் சேர்ந்து இடுப்பு ஆழம் வரை தண்ணீரில் பலர் இறங்கினர். இந்நிகழ்வின் காணொளி காங்கிரஸின் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
அப்போது, ராகுல் காந்தியுடன் மீனவர்கள் தங்கள் தொழிலில் சந்திக்கும் சவால்கள் மற்றும் போராட்டங்கள் குறித்து எடுத்துக்கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த விடியோ இணையளதங்களில் வைரலாகி வருகிறது-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.