

சான்பிரான்சிஸ்கோவில் இருந்து தில்லி புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் கோளாறு காரணமாக மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானக் குழுவினர் கண்டறிந்ததைத் தொடர்ந்து, பயணிகள் பாதுகாப்பிற்காக மங்கோலியா தலைநகர் உலான்பாதரில் தரையிறக்கப்பட்டது.
இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலான்பாதரில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு தேவையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அனைத்து பயணிகளையும் விரைவில் இலக்கை நோக்கி அழைத்துச் செல்ல நாங்கள் முயற்சிகளை மேற்கொள்ளும் வேளையில், எங்கள் கூட்டு நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.
எதிர்பாராத சூழ்நிலையால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். பயணிகள் மற்றும் குழுவின் பாதுகாப்பே ஏர் இந்தியாவுக்கு முக்கியம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்த பயணிகள் குறித்து உடனடியாக எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை. மங்கோலியாவில் தரையிறங்கிய விமானத்திலுள்ள பயணிகளுக்கு வெளியுறவுத் துறை சார்பில் உதவிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | ராஜஸ்தானில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லாரி; 12 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.