ராஜஸ்தானில் கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது லாரி மோதியதில் 12 பேர் பலியாகினர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஹர்மதா பகுதியில் இன்று(திங்கள்கிழமை) பிற்பகல் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி, கட்டுப்பாட்டை மீறிச் சென்றதில் கார் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது மோதியது.
தகவலறிந்த தீயணைப்புப் படையினர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக ஜெய்ப்பூர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லாரி சுமார் 300 மீட்டர் கட்டுப்பாட்டை இழந்து சென்றதாகவும் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்: நவ. 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.