

பிகாரில் பாஜக-ஜேடியுவின் 20 ஆண்டுக்கால ஆட்சியில் குடியேற்றத் தொழிலை மட்டும் நிறுவியுள்ளதாகவும், மாநிலத்தின் தொழில் பாரம்பரியத்தை வேண்டுமென்றே பலவீனப்படுத்தியுள்ளதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
பிகாரின் தொழில் பாரம்பரியத்தை மீண்டும் உயிப்பிக்கவும், வலுப்படுத்தவும் தனது கட்சியின் உறுதியை மீண்டும் வலியுறுத்தினார். மாநிலத்திற்கு இடம்பெயர்வு அல்ல, மறுகட்டமைப்பு தேவை என்று வலியுறுத்தினார்.
20 ஆண்டுக்கால ஆட்சியில் பாஜக- ஜேடியு கூட்டணி, வரம்பற்ற தொழில்துறை ஆற்றலைக் கொண்ட பிகாரில் மட்டுமே இடம்பெயர்வுத் தொழிலை நிறுவியுள்ளது.
பிகார் தேசிய வளர்ச்சி மற்றும் தொழில்துறை வரைபடத்திலிருந்து கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சர்க்கரை, காகிதம், சணல், பட்டு மற்றும் பால் துறைகளுக்குப் பெயர் பெற்ற பிகார் இன்று வேலையின்மை மற்றும் இடம்பெயர்வுக்கு ஒத்ததாக மாறிவிட்டது என்று அவர் கூறினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு பிரிக்கப்படாத பிகாரில் காங்கிரஸ் அரசு ஏராளமான தொழில்துறை அலகுகளை அமைத்து, மாநிலத்தை நாட்டின் தொழில்துறை வரைபடத்தில் உறுதியாக நிலைநிறுத்தியது.
அந்த சகாப்தத்தில், பிகாரின் வளர்ச்சி சக்கரம் கனரக தொழில்கள், எரிசக்தி, பால்பண்ணை மற்றும் ரயில் உற்பத்தியைச் சுற்றி வேகமாகச் சுழன்றது.
காங்கிரஸ் ஆட்சியின் கீழ் நிறுவப்பட்ட முக்கிய தொழில்துறை அலகுகளைப் பட்டியலிட்ட ரமேஷ், பராவ்னி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேற்கோள் காட்டினார், இது பிகாரை ஒரு எரிசக்தி உற்பத்தி மையமாக மாற்றியது.
சிந்த்ரி மற்றும் பராவ்னி உர ஆலைகள் நாட்டின் உரப் பாதுகாப்பை வலுப்படுத்தியதாகவும், பராவ்னி பால் பண்ணை இன்றைய சுதா பால் பண்ணையின் அடித்தளமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
பேலாவில் உள்ள ரயில் சக்கர ஆலை, மர்ஹோராவில் உள்ள டீசல் லோகோமோட்டிவ் ஆலை, நெபி நகரில் உள்ள தெர்மல் திட்டம் மற்றும் சுதா கூட்டுறவு பால்பண்ணை வலையமைப்பு ஆகியவற்றின் உதாரணத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
ஒருபுறம் காங்கிரஸ் அரசில் தொலைநோக்குப் பார்வையுடன் பிகாரில் தொழில்துறை அடித்தளத்தை அமைத்தன. மறுபுறம் பாஜக-ஜேடியு அரசு ஒரு தொழிற்துறையைக் கூட நிறுவவில்லை. அதற்குப் பதிலாக அவர்களின் ஊழல் மற்றும் ஒழுங்கற்ற கொள்கைகள் மூலம் ஏற்கெனவே உள்ள தொழிற்சாலைகளைக் கூட அழித்துவிட்டன.
அசோக் காகித ஆலையை மேற்கொள் காட்டிய அவர், 400 ஏக்கர் வளாகம் இப்போது இடிபாடுகளாக மாறிவிட்டது, இயந்திரகள் துருப்பிடித்துவிட்டன. அதேநேரத்தில் தொழிலாளர்கள் வேரோடு அழிந்தன.
பிகாரில் ஒரு காலத்தில் 33-க்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலைகள் இருந்ததாகவும், அவை நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் கிட்டத்தட்ட 40 சதவீதம். இன்று அவற்றில் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளன. அங்கு பயன்படுத்திய இயந்திரங்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு பலசரக்கு பொருள்களாக விற்கப்பட்டன.
பிரதமர் மோடி ஒவ்வொரு தேர்தலிலும் அவற்றை மீண்டும் தொடங்குவதாக உறுதியளிக்கிறார். ஆனால் ஒன்றன்பின் ஒன்றாக சர்க்கரை ஆலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன.
சணல் தொழிலுக்கு அதே கதியை தான் சந்தித்துள்ளது. 95% நெசவாளர் குடும்பங்கள் கடனிலும் வறுமையிலும் மூழ்கியுள்ளன.
இன்று, மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வேலை தேடி பிகாரை விட்டு வெளி மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஆலைகள் பாஜக-ஜேடியுவின் தவறான கொள்கைகள் மற்றும் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு தசாப்தங்களாக பாஜக-ஜேடியு அரசால் வேண்டுமென்றே பலவீனப்படுத்தியுள்ள பிகாரின் தொழில், வேலைவாய்ப்பு மற்றும் சுயச்சார்பு பாரம்பரியத்தை மீட்டெடுத்து வலுப்படுத்துவதே காங்கிரஸின் உறுதி. பிகாருக்கு இடம்பெயர்வு அல்ல, மறுகட்டமைப்பு தேவை என்று காங்கிரஸ் தலைவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.