

சத்தீஸ்கரில் சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் மோதி இன்று (நவ. 4) விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் பகுதியில் இருந்து கோர்பாவுக்கு பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் சரக்கு ரயிலின் கடைசிப் பெட்டியின் மீது பயணிகள் ரயிலின் முதல் பெட்டி மோதி விபத்துக்குள்ளானது.
இது குறித்து பிலாஸ்பூர் ஆட்சியர் கூறியதாவது, இதுவரை விபத்து நடந்த இடத்திலிருந்து 5 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ரயில்வே மற்றும் பிலாஸ்பூர் மாவட்ட நிர்வாகமும் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. சிலர் ரயில் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் சுற்றியுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
கோர்பா பயணிகள் ரயிலின் முன் இரு பெட்டிகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. ரயில் விபத்துக்கு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.