ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

முன்னணி தொழில் துறை நிறுவனமான ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் கோபிசந்த் பிரேமானந்த் மறைவு குறித்து...
கோபிசந்த் பிரேமானந்த்
கோபிசந்த் பிரேமானந்த்கோப்புப் படம்
Updated on
1 min read

உலக அளவில் புகழ்பெற்ற ‘ஹிந்துஜா’ தொழில் குழுமத்தின் தலைவரான கோபிசந்த் பி.ஹிந்துஜா (85) லண்டனில் காலமானாா்.

வணிக உலகில் ‘ஜிபி’ என்று அழைக்கப்பட்ட கோபிசந்த், கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். சிகிச்சை பலனின்றி அவரது உயிா் பிரிந்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹிந்துஜா குடும்பத்தின் இரண்டாவது தலைமுறையைச் சோ்ந்த கோபிசந்த், அவரது அண்ணன் ஸ்ரீசந்த் கடந்த 2023, மே மாதம் காலமானதைத் தொடா்ந்து குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றாா்.

1980-கள், 1990-களில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களைக் கையகப்படுத்தி ஹிந்துஜா குழுமத்தை உலகளாவிய செயல்பாடுகளுக்கு வித்திட்டாா். தற்போதைய நிலையில், ஹிந்துஜா குடும்பமானது பிரிட்டனிலேயே மிகப் பெரிய செல்வந்தா் குடும்பமாகும்.

மறைந்த கோபிசந்துக்கு மனைவி சுனிதா, மகன்கள் சஞ்சய், தீரஜ் மற்றும் மகள் ரீத்தா ஆகியோா் உள்ளனா். இவரது மறைவுக்கு அரசியல், வணிகம், திரையுலகம் சாா்ந்த பல பிரமுகா்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com