வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஒரே வடகிழக்கு என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு தலைவர்கள்
வடகிழக்கு தலைவர்கள்படம் - Express
Published on
Updated on
1 min read

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஒரே வடகிழக்கு என்ற புதிய பிராந்திய முன்னணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடகிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த பல்வேறு குரல்களை பொதுவான அரசியல் அமைப்பின் கீழ் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேகாலயா முதல்வர் கான்ட்ராட் கே சங்கா முயற்சியில் இந்த இயக்கம் ஒருங்கிணைக்கப்பட்டு தொடக்கிவைக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களின் ஒருங்கிணைந்த நோக்கம், மேம்பாட்டுத் தேவைகள் மற்றும் கலாசார அடையாளத்தை தேசிய அளவில் எடுத்துச்செல்வதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதல் கட்டமாக அடுத்த 45 நாட்களுக்குள் குழுவின் எதிர்காலப் போக்கை வகுக்க ஒன்பது பேர் கொண்ட சிறப்புக் குழுவைத் தலைவர்கள் அமைத்துள்ளனர்.

இந்தக் குழு, முன்மொழியப்பட்ட இயக்கத்தின் கட்டமைப்பு, செயல்பாட்டு கட்டமைப்பு மற்றும் முறைகள் மற்றும் அதன் அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கும். குறிப்பாக வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியுடன் ஒரே வடகிழக்கு என்ற அமைப்பு, இணைந்து செயல்படுமா? அல்லது சுயாதீனமான பாதையைத் தேர்ந்தெடுக்குமா? என்பதையும் இக்குழு ஆலோசித்து முடிவு செய்யும்.

தில்லியில் ஒரே வடகிழக்கு இயக்கத்தைத் தொடக்கிவைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைவர்கள் கூறியதாவது,

வடகிழக்கின் பல்வேறு மாநிலங்களின் தலைவர்களான நாங்கள், ஒருங்கிணைந்த மற்றும் வரலாற்று அறிவிப்பிற்காக ஒன்றிணைந்துள்ளோம். நமது மாகாணத்தைச் சேர்ந்த வெவ்வோறு குரல்கள் ஒரே அரசியல் குடையின் கீழ் இணைந்துள்ளன. வடகிழக்கு மக்களுக்கான ஒரு பொதுவான தளத்தை உருவாக்குவதற்கான முதல் படி இது எனக் குறிப்பிட்டனர்.

இதையும் படிக்க |தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

Summary

New Regional Front One Northeast Launched To Unite Voices Of The Region

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com