

தெலங்கானா மாநிலம், தண்டூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி 70 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 மாதக் குழந்தை, பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்த நிலையில், மூத்த சகோதரியின் திருமணத்துக்குச் சென்றுவிட்டு, வீடுதிரும்பிய இளைய சகோதரிகள் மூவரும் இந்த விபத்தில் பலியான சோக சம்பவமும் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம், விகாபாரபாதைச் சேர்ந்த எல்லையா கௌடு என்பவரின் மூத்த மகளுக்கு ஹைதராபாதில் அக். 17 ஆம் தேதியில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, தங்களின் சகோதரியின் திருமணத்துக்குச் சென்றுவிட்டு, அக். 31 ஆம் தேதியில் வீடுதிரும்ப இளைய சகோதரிகள் சாய்பிரியா, நந்தினி, தனுஷா ஆகிய மூவரும் திட்டமிட்டிருந்தனர்.
இருப்பினும், தங்களின் மகள்களுடன் மேலும் சில நாள்கள் இருக்க வேண்டும் என்று அவர்களின் தாயார் அம்பிகா கூறிய நிலையில், பயணத்தை திங்கள்கிழமைக்கு (நவ. 3) மாற்றினர்.
திங்கள்கிழமை அதிகாலையில் ரயிலில் செல்ல திட்டமிட்டிருந்தபோதிலும், அவர்கள் ரயிலைத் தவற விட்டனர்.
இதனையடுத்து, அவர்கள் மூவரையும் பேருந்தில் அனுப்பி வைத்தார், தந்தை எல்லையா கௌடு. பேருந்திலும் மூவரும் ஒரே இருக்கையில்தான் அமர்ந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில்தான், டிப்பர் லாரி மோதி பேருந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் மகள்களைப் பறிகொடுத்த தாயார் அம்பிகாவும் தந்தை எல்லையா கௌடுவும் ``கடவுளே! எங்களின் மூன்று குழந்தைகளையும் யார் திரும்பக் கொண்டு வருவார்கள்?
அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? மரணத்திலும்கூட அவர்கள் பிரிக்க முடியாதவர்களாக ஆகிவிட்டனர்’’ என்று கதறி அழுதனர்.
இதையும் படிக்க: கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை: மூவரை அடையாளம் கண்டது எப்படி? காவல் ஆணையர் தகவல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.