

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில், 3 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பிஜப்பூரின், தர்லாகுடாவில் அமைந்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் இன்று (நவ. 5) காலை முதல் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் துணை ராணுவப் படை மற்றும் சத்தீஸ்கர் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில், மாவோயிஸ்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்துடன், கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் உடல்கள் மற்றும் அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், தர்லாகுடா வனப்பகுதியில் தொடர்ந்து மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2,100 மாவோயிஸ்டுகள் சரணடைந்ததுடன், 477 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், வரும் 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் நாட்டில் உள்ள மாவோயிஸ்டுகள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.