ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஸ்மார்ட் வாட்ச்சில் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?
Published on
Updated on
1 min read

ஸ்மார்ட் வாட்ச்சில் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சில் வாட்ஸ்ஆப் தகவல்களை முழுமையாகப் படிக்கலாம், பதில் அளிக்கலாம், வாயிஸ் நோட் (ஒலித் தகவல்கள்) கூட அனுப்பலாம். இதுமட்டுமின்றி ஸ்மார்ட் வாட்ச்சில் இருந்தவாறு வாட்ஸ்ஆப் அழைப்புகளையும் மேற்கொள்ளலாம். இதன்மூலம் பயனர்களின் நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சில் வாட்ஸ்ஆப் நோடிபிகேஷன்களை பெறும் வகையிலான அம்சம் முன்கூட்டியே இருந்த நிலையில், தற்போது மெட்டாவும் வாட்ஸ் ஆப்பும் இணைந்து ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துவதைப் போன்றே ஸ்மார்ட் வாட்ச்சில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், ஸ்மார்ட் வாட்ச்சில் வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச்-க்கான வாட்ஸ்ஆப் செயலி சிறப்பம்சங்கள்

  • ஐபோனை எடுக்காமலேயே நமக்கு வாட்ஸ் ஆப்பில் அழைப்பது யார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

  • வாட்ஸ்ஆப் தகவல்களை முழுமையாகப் படிக்கலாம்.

  • வாட்ச்சில் இருந்தே வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகளை அனுப்பலாம், ரிப்ளே செய்யலாம்.

  • ஆப்பிள் வாட்ச்சில் இருந்தவாறே ஒலித்தகவல்களை (வாயிஸ்நோட்) அனுப்பலாம்.

  • எமோஜிக்கள் மூலம் பதில் அளிக்கலாம்.

  • புகைப்படங்களும், எமோஜிக்களையும் தெளிவாக ஸ்மார்ட்வாட்ச்சிலேயே பார்க்கலாம்.

இதையும் படிக்க | ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை 6% சரிவு

Summary

You Can Now Use WhatsApp On Apple Watch No iPhone Needed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com