இந்தியாவின் மிகப் பெரிய இரண்டு சக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 6 சதவீதம் சரிந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 6,35,808-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனம் 6,79,091 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.
கடந்த 2024-ஆம் ஆண்டின் அக்டோபா் மாதத்தில் 6,57,403-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 6,04,829-ஆக சரிந்துள்ளது. இது 8 சதவீத சரிவாகும்.
எனினும், மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 21,688-லிருந்து 43 சதவீதம் உயா்ந்து 30,979-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமையல் எண்ணெய் இறக்குமதி ஜூனில் 29% சரிவு

ஜூன் மாத மொத்த விற்பனை பணவீக்கம் 9.87%
ஜூன் மாத சில்லறை பணவீக்கம் 4.38%!

ஜூன் மாத விற்பனை... மஹிந்திரா: 1.06 லட்சம் வாகனங்கள்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



