

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி கூறியது தவறானது மற்றும் ஆதாரமற்றது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
ஹரியாணாவின் தேர்தல் பட்டியல் தரவுகளை மேற்கோள்காட்டி 25 லட்சம் பதிவுகள் போலியானது என்றும், மாநிலத்தில் கடந்தாண்டு வெற்றி பெற்றது, தனது கட்சியிடமிருந்து திருடப்பட்டது என்றும் ராகுல்காந்தி தில்லியில் இன்று காலை தெரிவித்தார்.
ராகுல் காந்தி கூறிய தரவுகளுக்கு மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாட்டை அவமதிக்க இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து ராகுல் காந்தி விளையாடுகிறார் என்று குற்றம் சாட்டினார்.
ராகுல்காந்தி குற்றம் சாட்டிய முறைகேடுக்கான 100 சதவீத ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறுகிறார். ஆனால் இது ஏமாற்று வேலை.
தேர்தல்களின்போது ராகுல் வெளிநாடு செல்கிறார், மக்களைச் சந்திப்பதில்லை. தேர்தலில் தோல்வியடைந்த பிறகு மற்ற கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார். அவர் கடுமையாக உழைக்கவோ, மக்களிடையே வாழவோ முடியாத ஒருவர் என்று கேலி செய்தார்.
வாக்களிப்பதில் ஏதேனும் முறைகேடு இருந்தால், அதைத் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தை அணுக வேண்டும். ஆனால் அதை அவர் ஒருபோதும் செய்வதில்லை என்று குற்றம் சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.