வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன் என்று ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
வாக்குச்சாவடி
வாக்குச்சாவடி
Published on
Updated on
1 min read

வாக்குச்சாவடியில் ஒரே நபர், மீண்டும் மீண்டும் வேறு வேறு அடையாள அட்டைகளுடன் வந்து வாக்களித்தபோது, அங்கிருந்த பல்வேறு கட்சிகளின் முகவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

ஹரியாணாவில் நடந்த வாக்குத் திருட்டு தொடர்பான பல்வேறு ஆதாரங்களுடன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

அதில், ஒரே புகைப்படத்தை வைத்து பல பெயர்களில் வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்றும், ஒரே நபர், வேறு வேறு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்து வாக்களித்ததாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

ஹரியாணாவில், வாக்காளர் பட்டியலில் ராகுல் காந்தி சொல்வது போன்ற குளறுபடிகள் இருந்திருந்தால், ஏன் ஒருவரும் வாக்காளர் அட்டை குறைபாடு குறித்து புகாரைப் பதிவு செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஹரியாணாவில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டபோது, ஒரே நபரின் பெயர் இத்தனை முறை இடம்பெற்றிருக்கிறது என்பது குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஏன் முறையிடவில்லை.

வாக்காளர் பட்டியலை வெளியிட்டபோதே, பெயர் இல்லை, நீக்கப்பட்டுவிட்டது என்று முறையிட்டிருக்கலாமே என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

ராகுல் காந்தி வெளியிட்ட குற்றச்சாட்டில், ஒரே நபரின் புகைப்படத்துடன் 223 வாக்காளர் பெயர்கள் இடம்பெற்றுள்ன. அதனால்தான், வாக்குச்சாவடி சிசிடிவி காட்சிகளை அழித்துவிட்டது என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், ஒரு வாக்காளர் பட்டியலையும் காண்பித்தார். அதில் ஒரே பெண்ணின் புகைப்படம் வேறு வேறு பெயர்களில் இடம்பெற்றுள்ளது. இந்தப் புகைப்படத்தைக் காட்டி ராகுல் காந்தி, யார் இந்தப் பெண், இவரது பெயர் என்ன, இவர் எங்கிருந்து வருகிறார் என கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இந்தப் பெண் பெயரால் 22 வாக்குகள் உருவாக்கப்பட்டு 10 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கப்பட்டுள்ளது. சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, ராஷ்மி, வில்மா என பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

உண்மையில், ராகுல் சொன்ன அந்தப் பெண், பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் என்பது தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com