எறும்புகள் மீதான பயம்! தெலங்கானாவில் இளம்பெண் தற்கொலை!

தெலங்கானாவில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து...
dowry harassment
இளம்பெண் தற்கொலை
Published on
Updated on
1 min read

தெலங்கானாவில், எறும்புகள் மீதான பயத்தினால் 25 வயது இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சங்காரெட்டி மாவட்டத்தில், திருமணமாகி 3 வயதுடைய பெண் குழந்தைக்கு தாயான இளம்பெண் மனிஷா (வயது 25) என்பவருக்கு, சிறுவயது முதல் எறும்புகள் மீது கடுமையான பயம் எனக் கூறப்படுகிறது.

இந்த பயத்தை உளவியல் ஆய்வாளர்கள், மிர்மெகோஃபோபியா என்று அழைக்கின்றனர். இதற்காக, மனிஷா அவரது சொந்த ஊரான மஞ்சேரியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனைகள் (கவுன்சிலிங்) பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த நவ.4 ஆம் தேதி அன்று மனிஷாவின் கணவர் ஸ்ரீகாந்த் வழக்கம்போல் வேலைக்குச் சென்றவுடன், தனது வீட்டைச் சுத்தம் செய்யப்போவதாகக் கூறி அவரது குழந்தையை அருகில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மாலை வேலை முடிந்து வீடுத் திரும்பிய அப்பெண்ணின் கணவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்துள்ளார். அப்போது, வீட்டில் உள்ள மின்விசிறியில் மனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மனிஷாவின் வீட்டில் இருந்து கடிதம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கடிதத்தில், என்னை மன்னித்துவிடுங்கள் ஸ்ரீ, என்னால் இந்த எறும்புகளுடன் வாழ முடியாது எனக் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், மனிஷா அவரது வீட்டைச் சுத்தம் செய்தபோது எறும்புகளைக் கண்டு பயந்து தற்கொலை செய்திருக்கக் கூடும், எனத் தெரிவித்துள்ளனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

இதையும் படிக்க: நவம்பர் புரட்சியெல்லாம் இருக்காது: பதவி மாற்றம் குறித்து கர்நாடக துணை முதல்வர்!

Summary

The tragic incident of a 25-year-old woman committing suicide by hanging herself in Telangana due to fear of ants has caused great sadness.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com