

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகனும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான ஜெய் ஷாவுக்கு பேட் கூட பிடிக்கத் தெரியாது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பிகாரின் பாகல்பூரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, ``நீங்கள் அதானி, அம்பானி அல்லது அமித் ஷாவின் பிள்ளைகளாக இருந்தால் மட்டுமே உங்களால் பெரிய கனவு காண முடியும்.
அமித் ஷாவின் மகன் ரன் எடுப்பாரா என்பதைக்கூட விட்டு விடுங்கள், அவருக்கு மட்டையை (Bat) எப்படி பிடிப்பது என்றுகூட தெரியாது. ஆனாலும் அவர்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்.
கிரிக்கெட்டில் அனைத்தையும் அவர்தான் கட்டுப்படுத்துகிறார். அவர் ஏன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்? ஏனெனில், பணம்தான் காரணம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, விவசாயிகளின் நிலங்களைப் பறித்து அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களுக்கு பரிசளிக்கிறது’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஜெய் ஷா தலையீட்டில் பிரதிகாவுக்கும் பதக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.