

மூத்த காங்கிரஸ் தலைவர் எம்.ஆர். ரெகுசந்திரபால் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அவருக்கு வயது 75. பல ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைந்த முன்னாள் கலால் அமைச்சர் ரெகுசந்திரபால், 1980 முதல் சில ஆண்டுகள் காஞ்சிரம்குளம் பஞ்சாயத்துத் தலைவராக பணியாற்றினார்.
இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த அவர் 1980, 1991 ஆம் ஆண்டுகளில் கோவளம் மற்றும் பரஸ்சலா தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
1991 முதல் 1995 வரை கே. கருணாகரனின் அரசில் கலால் அமைச்சராக பணியாற்றினார். தனது பரபரப்பான அரசியல் வாழ்க்கையில், அவர் கவிதைகள், நாடகங்கள் இயற்றியதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ரெகுசந்திரபாலுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சா்க்கரை நோயைத் தடுக்க தவறும் ஐ.டி. ஊழியா்கள்: ஆய்வில் தகவல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.