

பிகாரில் காட்டாட்சியைக் கொண்டுவர ராஷ்டிரிய ஜனதா தளம் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
பிகாரின் பெத்தியாவில் நடைபெற்ற பாஜக பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ``ஆர்ஜேடியின் பிரசாரப் பாடலையும் முழக்கங்களையும் நீங்கள் கேட்டால், நடுங்குவீர்கள். பிகாரின் குழந்தைகளுக்கு அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பது அவர்களின் பிரசாரத்திலேயே தெரிகிறது.
தாங்கள் ரௌடிகளாக மாற விரும்புவதாக ஆர்ஜேடியின் பிரசாரத்திலேயே குழந்தைகள் சொல்ல வைக்கப்படுகிறார்கள்.
இளைஞர்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி லேப்டாப் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கொடுக்கும் அதே வேளையில், எதிர்க்கட்சியினர் துப்பாக்கிகளைக் கொடுத்து இளைஞர்களை ரௌடிகளாக மாற்ற விரும்புகின்றனர்’’ என்று தெரிவித்தார்.
ஆர்ஜேடி-யின் பிரசாரத்தில் 10 வயது சிறுவன் ஒருவன், துப்பாக்கி மற்றும் வன்முறை குறித்துப் பேசியதை பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், ``இன்றைய பிகாரில் கையைத் தூக்குங்கள் என்று சொல்வோர்க்கு இடமில்லை. ஸ்டார்ட்அப்-கள்தான் பிகாருக்கு தேவை.
துப்பாக்கி ஏந்திய அரசை நாங்கள் விரும்பவில்லை; மீண்டும் ஒருமுறை என்டிஏ என்று கூறுங்கள்.
காட்டாட்சி என்றால் துப்பாக்கி, கொடுமை, ஊழல், பகை என்று பொருள். அவர்கள் மோசமான ஆட்சியைக் கொண்டுவரவே விரும்புகின்றனர். காட்டாட்சி வந்தவுடன், பிகாரின் வீழ்ச்சியும் தொடங்கியது. ஆர்ஜேடிதான் பிகாரின் அனைத்து வளர்ச்சிகளையும் முடிவுக்குக் கொண்டு வந்தது.
ஆனால், நீங்கள்தான் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளீர்கள். அவர்கள் இரவில் தூங்குவதில்லை’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: வாக்குத் திருட்டு! தேர்தல் ஆணையத்தில் ராகுல் புகாரளிக்க பாஜக வலியுறுத்தல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.