

பெங்களூரு மத்திய சிறையில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவருக்கு சிறப்பான உபசரிப்பு கிடைப்பதாக விடியோ வெளியாகியுள்ளது.
பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உயர் பாதுகாப்பைக் கொண்டிருந்தாலும், சிறைக் கைதிகள் தண்டனைக்கு பதிலாக ஏகபோக வாழ்வை அனுபவிப்பதாகத்தான் தெரிகிறது.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்ததாகக் கைது செய்யப்பட்ட ஜுஹாத் ஹமீத் சகீல் மன்னா, பல பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட உமேஷ் ரெட்டியும் பரப்பன அக்ரஹாரா சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உமேஷ் ரெட்டி சிறை அறைக்குள் தொலைக்காட்சியும், ஹமீத் மொபைல் போனில் யாரோ ஒருவருடன் உரையாடுவது போன்றும் விடியோ வெளியாகியுள்ளது.
உயர் பாதுகாப்பு கொண்ட மத்திய சிறையில் கைதிகள் வசதியாக இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிறையில் விசாரணை நடத்தப்படும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கான உபசரிப்பு என்பது இது முதல்முறை அல்ல. கடந்த அக்டோபரில், சிறைக் கைதியான ஸ்ரீனிவாஸ் என்ற ரௌடி, சிறையினுள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.
அதுமட்டுமின்றி, ரேணுகா சாமி கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன், சிறைக்குள் விஐபி உபசரிப்பில் கைகளில் சிகரெட் மற்றும் காஃபி அருந்துவது போன்ற விடியோக்களும் வெளியாகின.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... சேர்க்கவா நீக்கவா, வாக்காளர் சிறப்பு திருத்தம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.