

வாக்குத் திருட்டை மூடிமறைக்கவே எஸ்ஐஆர் நடத்தப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசுகையில், ``வாக்குத் திருட்டை மறைக்கத்தான் எஸ்ஐஆர்.
சில நாள்களுக்கு முன்பாக, ஹரியாணா வாக்குத் திருட்டு குறித்து ஒரு விளக்கக் காட்சியை நான் அளித்தேன். சுமார் 25 லட்சம் வாக்குகள்; அதாவது எட்டில் ஒன்று திருடப்பட்டதாகத் தரவு தெளிவாகக் காட்டுகிறது.
இந்தத் தரவுகளை ஆராய்ந்த பிறகுதான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கரிலும் இதேபோல் வாக்குத் திருட்டு நடந்துள்ளதாக நினைக்கிறேன். இது, பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டதாகும்.
எங்களிடம் நிறைய விரிவான தகவல்கள் உள்ளன. இதுவரையில் நாங்கள் காட்டியது ஒரு சிறிய பகுதி மட்டுமே.
ஜனநாயகமும் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பும் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோர் கூட்டாக இணைந்து இதில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குத் திருட்டுக்கு எதிரான பிரசாரம் தொடரும். தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறலுக்கு காங்கிரஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: தேர்தலுக்கு மத்தியில் ஜாலியாக சுற்றுலா செல்லும் ராகுல்: பாஜக விமர்சனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.