கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: அனைத்து கோணங்களிலும் விசாரணை - அமித் ஷா

தில்லி செங்கோட்டை அருகேவுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் கார் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து அமித் ஷா பேசியவை...

News image

அமித் ஷா / கார் வெடித்து விபத்துக்குள்ளான பகுதி - படம் - ஏஎன்ஐ

Updated On :10 நவம்பர் 2025, 4:12 pm

தில்லி செங்கோட்டை அருகேவுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் கார் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கார் வெடிவிபத்து தொடர்பாக காவல் ஆணையருடன் தொடர்பில் இருந்து தகவல்களை கேட்டறிந்த பிறகு செய்தியாளர்களுடன் அமித் ஷா பேசியதாவது,

தில்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த விபத்து குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும். கார் வெடித்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்துக்கும், படுகாயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கும் செல்லவுள்ளேன். அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவுள்ளேன். கார் வெடி விபத்துக்கு பின்புலத்தில் செயல்பட்டவர்கள் யார் என்பதை விசாரணை நடத்தி முழு உண்மையை மக்கள் முன்பு வைப்போம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.