

பிகார் பேரவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 14.55 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிகாரில் மொத்தமுள்ள 243 பேரவைத் தொகுதிகளுக்கான முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நவ.6 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
இதற்காக 45,399 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, இதில் 40,073 வாக்குச்சாவடிகள் ஊரகப் பகுதிகளில் உள்ளன. இந்தத் தேர்தலில் 1,302 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 1.75 கோடி பெண் வாக்காளர்கள் உள்பட 3.7 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர்.
இதில், 1,95,44,041 ஆண் வாக்காளர்கள் மற்றும் 1,74,68,572 பெண் வாக்காளர்கள் அடங்குவர். மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் 943 பேரும் வாக்களிக்கவுள்ளனர்.
காலை 7 மணியளவில் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக வாக்களித்தனர்.
இரண்டாம் கட்டத் தேர்தலில் 20 மாவட்டங்களில், அதிகபட்சமாக கயா மாவட்டத்தில் 15.97 சதவிகித வாக்குகளும், கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 15.81 சதவிகித வாக்குகளும், ஜமுய் மாவட்டத்தில் 15.77 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மதுபானியில் 13.25 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
மகதம், சம்பாரண் மற்றும் சீமாஞ்சல் உள்ளிட்ட தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 9 மணி நிலவரப்படி,
அராரியாவில் 15.34 சதவிகிதமும்,
அர்வாலில் 14.95 சதவிகிதமும்,
ஔரங்காபாத்தில் 15.43 சதவிகிதமும்,
பங்காவில் 15.14 சதவீதமும்,
பாகல்பூரில் 13.43 சதவிகிதமும்,
ஜஹானாபாத்தில் 13.81 சதவிகிதமும்,
கைமூரில் 15.08 சதவிகிதமும்,
கதிஹாரில் 13.77 சதவிகிதமும்,
நவாடாவில் 13.46 சதவிகிதமும்,
பஸ்சிம் சம்பரானில் 15.04 சதவிகிதமும்,
பூர்ணியாவில் 15.54 சதவிகிதமும்,
பூர்வி சம்பரானில் 14.11 சதவிகிதமும்,
ரோஹ்தாஸில் 14.16 சதவிகிதமும்,
ஷியோஹரில் 13.94 சதவிகிதமும்,
சீதாமர்ஹியில் 13.49 சதவிகிதமும்,
சுபாலில் 14.85 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.