

தில்லி செங்கோட்டை அருகே கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில், 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் கார் உரிமையாளரான ஃபரிதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் முகமது உமரை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
தில்லி செங்கோட்டை அருகே நேற்று (நவ.10) மாலை சாலையில் நின்றுகொண்டிருந்த ‘ஹுண்டாய் ஐ-20’ கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயங்களுடன் தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கார் வெடிவிபத்து தொடர்பாக 100 க்கும் மேற்பட்ட கார் சென்ற பார்க்கிங், சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்களின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தில்லி காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த முதற்கட்ட விசாரணையில், முகமது உமர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காரில் ஒரு டெட்டனேட்டரை வைத்து காரை வெடிக்கச் செய்தது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
பிரபல சுற்றுலாத் தலமான தில்லி செங்கோட்டைப் பகுதியில் மக்கள் கூட்டமாக இருந்த பரபரப்பான மாலை நேரங்களில், பயங்கரப் பாதிப்புகளை ஏற்படுத்த, அம்மோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெய் கொண்டு வெடிவிபத்தை நடத்தியதை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பின்னணி என்ன?
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், திங்கட்கிழமை மாலை 6.52 மணிக்கு குண்டுவெடிப்புக்கு முன்னதாக, செங்கோட்டைக்கு அருகிலுள்ள சுனேஹ்ரி மசூதி அருகே கார் மூன்று மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
கார் பிற்பகல் 3.19 மணிக்கு வாகன நிறுத்துமிடத்திற்குள் நுழைந்து மாலை 6.48 மணிக்கு புறப்படுவதையும், சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறுவதையும் சிசிடிவியில் காணமுடிகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக தில்லி காவல் துறை அதிகாரிகள் சந்தேகத்துக்குரிய 13 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள உளவுத்துறை வட்டாரங்கள், ஹூண்டாய் ஐ20 கார் முதலில் முகமது சல்மானுக்குச் சொந்தமானது என்றும், அவர் அந்தக் காரை பலருக்கு விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், அவர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்
முதலில் நதீம் என்பவருக்கும், பின்னர் ஃபரிதாபாத் செக்டார் 37 இல் உள்ள ராயல் கார் ஸோன் என்ற கார் டீலருக்கும் அந்தக் கார் விற்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அனைத்து மொபைல் எண்களும் சுவிட்-ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அந்தக் கார், புல்வாமாவைச் சேர்ந்த தாரிக் என்பவராலும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள முகமது உமராலும் வாங்கப்பட்டதையும் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.