தர்மேந்திரா உடல்நிலை என்ன? மனைவி ஹேமமாலினி விளக்கம்!

தர்மேந்திரா உடல்நிலை என்ன? என்பது குறித்து அவரது மனைவி ஹேமமாலினி விளக்கமளித்துள்ளதைப் பற்றி...
தர்மேந்திராவுடன் ஹேமமாலினி.
தர்மேந்திராவுடன் ஹேமமாலினி.
Published on
Updated on
1 min read

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா, உடல்நிலை குறித்து அவரது மனைவியும் மக்களவை உறுப்பினருமான ஹேமமாலினி விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஹீமேன் என்று புகழப்படும் தர்மேந்திரா, மூச்சுத் திணறல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் நேற்றிரவு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

நடிகர் தர்மேந்திரா பிரபல இருதயநோய் நிபுணரான மருத்துவர் தேவ் பஹ்லாஞ்சனியின் கண்காணிப்பில் இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் தீவிரப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் தர்மேந்திரா இன்று காலை காலமானதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகினர். இந்த நிலையில், தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து அவரது மனைவி ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “என்ன நடக்கிறது என்பது மன்னிக்க முடியாதது. பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை அளித்துவரும் நிலையில், பொறுப்புமிக்க செய்தி சேனல்கள் எவ்வாறு தவறான தகவல்கள் பரப்ப முடியும். இது மிகவும் பொறுப்பற்ற செயல். எங்கள் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு மதிப்பளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் தந்தை நலமுடன் உள்ளார், குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தர்மேந்திராவுடன் ஹேமமாலினி.
100 சிசிடிவி பதிவுகள்... தில்லி வெடிவிபத்தில் கார் உரிமையாளர் சிக்கிய பின்னணி!
Summary

What is Dharmendra's health condition? Wife Hema Malini explains!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com