

தில்லி கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், குற்றவாளியுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சிவப்பு நிற ஸ்போர்ட்ஸ் காரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
தில்லி காவல்துறை, தேடப்பட்டு வரும் சிவப்பு நிற கார் குறித்த தகவல்களை புகைப்படத்துடன் அனைத்து காவல்நிலையங்களுக்கும், சோதனைச் சாவடிகளுக்கும் அனுப்பி எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
தில்லி செங்கோட்டை அருகே, ஐ20 காரில் குண்டு வைத்து வெடிக்க வைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள், ஏற்கனவே சிவப்பு நிற ஸ்போர்ட்ஸ் வகை கார் ஒன்றை வைத்திருந்ததாக புலனாய்வு விசாரணையில் தெரிய வந்திருப்பதைத் தொடர்ந்து, அந்தக் காரை தில்லி காவல்துறை தேடி வருகிறது.
இந்த வாகனத்தைத் தேடும் பணியில், தில்லி காவல்துறையைச் சேர்ந்த ஐந்து குழுக்கள் ஈடுபட்டுள்ளன. மேலும், கார் பற்றிய தகவல்களைக் கொடுத்து, தேடுதல் பணியில் உத்தரப்பிரதேச மற்றும் ஹரியாணா காவல்துறையும் ஈடுபட்டுள்ளனர்.
ஐ20 காரில் வெடிபொருள்கள் வெடித்ததில், நவ. 10ஆம் தேதி 12 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில், குற்றவாளிகள் மேலும் இரண்டு பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கியிருப்பது தெரிய வந்தது.
தில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சிவப்பு நிற கார் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.