

தில்லி கார் குண்டுவெடிப்பு நடந்தபோது பதிவான புதிய சிசிடிவி காட்சிகளை தில்லி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை கார் வெடித்துச் சிதறியதில் 12 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கார் வெடிப்பு தொடர்பாக தில்லி காவல்துறை, தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இது பயங்கரவாதச் செயல் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சரவை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
செங்கோட்டை சுற்றுப் பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை விசாரணை அமைப்பு ஆராய்ந்ததில், செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்தில் இருந்து உமர் என்ற மருத்துவர் ஓட்டிய ’ஹூண்டாய் ஐ20’ கார் மூலம் வெடிகுண்டு வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
இந்த கார் வெடித்தபோது, அப்பகுதி கடைகளில் இருந்த சிசிடிவி காட்சிகள், சிலர் செல்போன்களில் பதிவான காட்சிகள் எனக் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கார் வெடித்த இடத்தில், மிக அருகில் பதிவான சிசிடிவி காட்சிகள் முதல்முறையாக வெளிவந்துள்ளது. இந்த விடியோவில், போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து கொண்டிருக்கும் பகுதியில், திடீரென்று கார் வெடித்துச் சிதறும் காட்சிகளும், மக்கள அலறி ஓடும் காட்சிகளில் இடம்பெற்றுள்ளது.
மிக அருகில் பதிவான இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.