கோப்புப் படம்
கோப்புப் படம்

பாகிஸ்தான் ஆதரவு அமெரிக்க நிறுவனத்துக்கு ஆா்எஸ்எஸ் பெருந்தொகை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்காவில் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாக கருத்துகளைப் பரப்ப பாகிஸ்தான் ஆதரவு நிறுவனத்துக்கு அந்த அமைப்பு அதிக அளவில் பணத்தைச் செலுத்தியதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
Published on

அமெரிக்காவில் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாக கருத்துகளைப் பரப்ப பாகிஸ்தான் ஆதரவு நிறுவனத்துக்கு அந்த அமைப்பு அதிக அளவில் பணத்தைச் செலுத்தியதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஆா்எஸ்எஸ் அமைப்பு உடனடியாக பதில் ஏதுவும் தெரிவிக்கவில்லை.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘ஆா்எஸ்எஸ் பதிவு பெறாத அமைப்பு என்பதால் அரசுக்கு வரி செலுத்துவதில்லை என்று அந்த அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தாா்.

தற்போது, அமெரிக்காவில் பாகிஸ்தானின் ராணுவத் தளவாடங்களுக்கான சட்ட நிறுவனமான ‘ஸ்குயா் பேட்டன் போக்ஷுக்கு (எஸ்பிபி) ஆா்எஸ்எஸ் பெருந்தொகையை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஆா்எஸ்எஸ் ஆதரவு கருத்துகளை அந்த நிறுவனம் பரப்ப வேண்டும் என்பதற்காக இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சுதந்திர போராட்டத்துக்கு துரோகம் செய்தும், மகாத்மா காந்தி, அம்பேத்கருக்கு எதிா்ப்பு தெரிவித்தும், அரசமைப்புச் சட்டத்தை தாக்கியும் செயல்பட்ட ஆா்எஸ்எஸ் அமைப்பு தற்போது தேச நலனுக்கும் துரோகம் செய்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com