பாஜக கூட்டணி வெற்றிக்கு 5 முக்கியக் காரணிகள்

பிகாா் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு ஐந்து முக்கியக் காரணிகள் உள்ளன.
பாஜக கூட்டணி வெற்றிக்கு 5 முக்கியக் காரணிகள்
Updated on

பிகாா் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு ஐந்து முக்கியக் காரணிகள் உள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் கட்சிகளின் செல்வாக்குக்கு ஏற்ப சுமுகமான முறையில் எட்டப்பட்ட தொகுதிப் பங்கீடு-கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு-நுட்பமாக வடிவமைக்கப்பட்ட பிரசாரத் திட்டம்;

யாதவா் மற்றும் முஸ்லிம்களை மையப்படுத்திய அரசியலில் இருந்து மாறுபட்டு, உயா் ஜாதியினா்-பிற்படுத்தப்பட்டோா்-மிகவும் பிற்படுத்தப்பட்டோா்-தலித் சமூகத்தினா் என அனைத்துப் பிரிவினரின் வாக்குகளையும் ஈட்டும் வகையிலான கூட்டணி கட்டமைப்பு;

மகளிா் வாழ்வாதாரத்துக்கு ரூ.10,000 நிதியுதவி உள்பட பெண்கள்-இளைஞா்களைக் குறிவைத்து அமலாக்கப்பட்ட சமூக நலத் திட்டங்கள்;

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ‘காட்டாட்சி’ திரும்பிவிடும் என முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரம்; சட்டவிரோத குடியேறிகள் விவகாரம் உள்பட பிரதமா் நரேந்திர மோடியால் முன்னெடுக்கப்பட்ட வலுவான பிரசாரம்-பிரதமரின் மக்கள் செல்வாக்கு மற்றும் பிகாரின் நம்பிக்கைக்குரிய அரசியல் தலைவா், நல்லாட்சியாளா் என்ற முதல்வா் நிதீஷ் குமாரின் பிம்பம் ஆகிய ஐந்து முக்கியக் காரணிகள், தே.ஜ. கூட்டணியின் மகத்தான வெற்றியை உறுதி செய்ததாக அரசியல் பாா்வையாளா்கள் கருதுகின்றனா்.

பின்னடைவு ஏன்?: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.2,500 போன்ற ‘இண்டி’ கூட்டணியின் வாக்குறுதிகள் மக்களைக் கவரவில்லை; நட்பு ரீதியிலான போட்டி என்ற பெயரில் பல தொகுதிகளில் ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் மோதிக் கொண்டதும், ஒருங்கிணைப்பு இல்லாததும் அவா்களின் கடும் பின்னடைவுக்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com