தில்லியில் நச்சுப்புகை: மிகவும் மோசம் பிரிவில் நீடிக்கும் காற்று மாசு!

தில்லியில் காற்று மாசு மோசமடைந்து 400 புள்ளிகளை எட்டியது பற்றி..
air pollution
தில்லியில் காற்று மாசு
Published on
Updated on
2 min read

தேசிய தலைநகர் தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் நீடிப்பதோடு, நச்சுப் புகை மண்டலம் அடத்தியாக உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி,

தில்லியில் நச்சுப் புகை மண்டலம் அடத்தியாகக் காணப்படுகிறது. காற்றின் தரக்குறியீடு இன்று காலை 7 மணியளவில் 399 ஆக பதிவானது. அதன் பின்னர் 8 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 397 ஆக பதிவானது. ஒரு மணி நேரத்தில் ஒருசில புள்ளிகள் மட்டுமே குறைந்தது. இது தொடர்ச்சியான மாசு அளவைக் குறிப்தாகும். காற்று மாசு அதிகரித்ததன் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

முன்னதாக நேற்று மாலை 4 மணியளவில் தேசியத் தலைநகரில் பதிவான காற்றின் தரம் 404 ஆக இருந்தது, இது 'கடுமையான காற்றின் தரம்' பிரிவில் வகைப்படுத்தப்பட்டது.

தில்லியில் இன்று மாலை 4 மணிய வரை ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 400 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’பிரிவை பதிவு செய்யும் என புள்ளிவிவரம் தெரிவித்துள்ளன.

அசோக் விஹார் காற்றின் தரக்குறியீடு 419, பவானா 440, புராரி கிராசிங் 412, சிஆர்ஆர்ஐ மதுரா சாலை 403, சாந்தனி சௌக் 442, துவாரகா செக்டார்-8 413, ஐடிஓ 428, ஜஹாங்கிர்புரி 421, ஜேஎல்என் 43, 3ஹூண்ட் 40, நாகர்ஃப் 40 நரேலா 405, பட்பர்கஞ்ச் 412, பஞ்சாபி பாக் 413, ஆர்கே புரம் 416, ரோகினி 430, சிரி கோட்டை 419, சோனியா விஹார் 417, விவேக் விஹார் 427 மற்றும் வஜிர்பூர் 444 பதிவாகியுள்ளது.

அலிபூரில் உள்ள கண்காணிப்பு நிலையத்தில் காற்றின் தரக்குறியீடு 396, அயா நகர் 385, ஐஜிஐ விமான நிலையம் 367, லோதி சாலை 302, மந்திர் மார்க் 395, ஓக்லா ஃபேஸ்-2 398, ஷாதிபூர் 362 மற்றும் ஸ்ரீ அரவிந்தோ மார்க் 392 இவை அனைத்தும் 'மிகவும் மோசம்' பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தேசியத் தலைநகரில் காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்து வருவதால், காற்றுத் தர மேலாண்மை ஆணையம் ஏற்கெனவே தேசியத் தலைநகர் பகுதி முழுவதும் "கடும் மோசம்" பிரிவில் நிலை III வகைப்படுத்தியுள்ளது.

தில்லி-என்சிஆர் பிராந்தியத்தில் காற்று மாசு நெருக்கடிக்கு பங்களிக்கும் கழிவு எரிப்பைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய பஞ்சாப், ஹரியானா அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே தில்லியின் அதிகரித்து வரும் காற்று மாசு பிரச்னையை குறைக்க செயற்கை மழையை பொழியச் செய்வதற்கான சோதனை முயற்சி அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.

Summary

Reports have emerged that the air quality in the national capital Delhi remains in the very poor category and a toxic smog zone has formed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com