

ஐபிஎல் வரலாற்றில் ஷர்துல் தாக்குர் புதிய வரலாற்றை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
பண வர்த்தகம் (டிரேடிங்) முறையில் ரூ. 2 கோடிக்கு ஷர்துல் தாக்கூரை மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணியில் இணைத்துள்ளது.
ஐபிஎல் நடைமுறையில் பொதுவாக ஏலம், மினி ஏலம் மூலம் வீரர்களை தங்களது அணிக்கு ஏற்ப எடுப்பார்கள்.
இந்த மினி ஏலத்திற்கு முன்பாக டிரேடிங் எனப்படும் பணம் கொடுத்து வீரர்களை வாங்கிக் கொள்ளலாம் அல்லது ஒரு வீரருக்குப் பதிலாக மாற்று வீரரை வாங்கிக் கொள்ளலாம்.
இந்தமாதிரியான டிரேடிங் மூலம்தான் ஷர்துல் தாக்குர் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
மொத்தமாக, மூன்றாவது முறையாக ஷர்துல் தாக்குர் டிரேடிங் மூலம் அணிகளுக்கு மாறியுள்ளார்.
கடந்த சீசனில் ஏலத்தில் யாருமே எடுக்காத ஷர்துல் தாக்குரை லகனௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி காயம் காரணமாக திடீரென அணியில் எடுத்தது.
தற்போது, லக்னௌ அணியில் இருந்து தனது சொந்த ஊரான மும்பைக்குத் திரும்பியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ரூ. 2 கோடிக்கு டிரேடிங் செய்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இவர் 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வெல்வதிலும் பங்காற்றினார்.
ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகளுக்காக விளையாடியுள்ள ஷர்துல் தாக்கூர், 105 போட்டிகளில் 107 விக்கெட்டுகள், 325 ரன்கள் குவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.