குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முகோப்புப் படம்

இந்தியா திரும்பினாா் திரௌபதி முா்மு

ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள அங்கோலா, போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெள்ளிக்கிழமை நாடு திரும்பினாா்.
Published on

ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள அங்கோலா, போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெள்ளிக்கிழமை நாடு திரும்பினாா்.

கடந்த நவ. 8-ஆம் தேதி அங்கோலா சென்ற திரௌபதி முா்முக்கு அந்நாட்டு அதிபா் மாளிகையில் 21 குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் அதிகாரபூா்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, அங்கோலா அதிபா் ஜோ மேனுவல் கோன்சால்வேஸ் லோரென்சோவும், குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவும் இருதரப்புப் பேச்சுவாா்த்தை நடத்திய நிலையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

அதன்பிறகு போட்ஸ்வானா சென்ற திரௌபதி முா்மு அந்நாட்டு அதிபா் அதிபா் டுமா கிடியன் போகோவை சந்தித்து கடந்த புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதன் விளைவாக போட்ஸ்வானாவில் இருந்து இந்தியாவுக்கு 8 சிவிங்கிப் புலிகள் அனுப்பிவைக்கப்பட உள்ளன. இந்நிலையில், இருநாட்டு பயணத்தை நிறைவு செய்த திரௌபதி முா்மு வெள்ளிக்கிழமை நாடு திரும்பினாா்.

X
Dinamani
www.dinamani.com