ரூ. 62,000 கோடி மோசடி குற்றச்சாட்டு? முன்னாள் மத்திய அமைச்சரை பாஜக நீக்கம்!

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்கை பாஜக நீக்கம் செய்தது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்
முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் ரூ. 62,000 கோடி ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்கை கட்சியிலிருந்து பாஜக நீக்கம் செய்தது.

அதானி நிறுவனத்துடன் சேர்ந்து பிகார் அரசு ஊழலில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்கை கட்சியிலிருந்து பாஜக நீக்கியது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறிய பாஜக, இதுகுறித்து ஆர்.கே. சிங் விளக்கமளிக்க கோரியுள்ளது.

2,400 மெகாவாட் பாகல்பூர் (பிர்பைண்டி) மின் திட்டத்தை அதானி பவர் லிமிடெட் நிறுவனத்துக்கு பிகார் அரசு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ரூ. 60,000 கோடி முதல் ரூ. 62,0000 கோடி ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டினார்.

அதுமட்டுமின்றி, பிகார் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, குற்றவியல் வழக்கு பின்னணி கொண்ட தலைவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ஆர்.கே. சிங் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். பதிவில் ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் ஆனந்த் சிங் மற்றும் பிகார் துணை முதல்வரான பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌத்ரி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

இதனைத் தொடர்ந்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஆர்.கே. சிங்கை, கட்சியிலிருந்து பாஜக நீக்கியது. மேலும், அவரின் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்குமாறு பாஜக கூறியுள்ளது.

இதையும் படிக்க: பிகாரில் நடந்த வாக்குத்திருட்டை விரைவில் அம்பலப்படுத்துவோம்: கே.சி. வேணுகோபால்

Summary

BJP suspended ex union minister RK Singh day after Bihar win

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com