

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் நெளகாம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்களின் மாதிரிகள் வெள்ளிக்கிழமை(நவ. 14) நள்ளிரவில் வெடித்துச் சிதறிய விபத்து பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
இந்த விபத்தில் காவல் நிலைய வளாகம் பலத்த சேதமடைந்தது. மேலும், அந்தக் கட்டடத்தைச் சுற்ரியுள்ள பிற கட்டடங்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்பட மொத்தம் 9 பேர் பலியாகினர். 32 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த விதத்தில் சிகிச்சையளிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சேதமடைந்த கட்டுமானங்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.