

மும்பை- அகமதாபாத் அதிகவேக ரயில் பாதையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக குஜராத்தின் சூரத்தில் கட்டுமானத்தில் உள்ள புல்லட் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார்.
பிரதமர் இன்று காலை சூரத் விமான நிலையத்தில் தரையிறங்கி, கட்டுமானத்தில் உள்ள புல்லட் ரயில் நிலையம் உள்ள அன்ட்ரோலி பகுதியை அடைந்தார். அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி பணிகளை ஆய்வு செய்தார்.
இந்தியாவின் மிகவும் லட்சிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும். சுமார் 508 கி.மீ நீளமானது. குஜராத், தாத்ரா, நாகர் ஹவேலியில் 352 கி.மீ மற்றும் மகாராஷ்டிரத்தில் 156 கி.மீ ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
இன்றைய தினம் மாலையில், பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் நர்மதா மாவட்டத்தில் உள்ள தேதியபாடா நகரத்திற்கு பிரதமர் மோடி வருகை தருவார், அங்கு பழங்குடியினரின் சின்னமான பிர்சா முண்டாவின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
ரூ. 9,700 கோடிக்கும் அதிகமான செலவில் உள்கடடமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டுவார்.
கூட்டத்தில் உரையாற்றுவதற்கு முன், பிரதமர் தேதியபாடாவிலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள சக்பரா தாலுகாவின் தேவ்மோக்ரா கிராமத்தில் உள்ள பழங்குடி சமூகத்தின் குல தெய்வமான பண்டோரி மாதா கோயிலில் வழிபாடு செய்யவார் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: ஜடேஜாவை விற்றது ஏன்? மனம் திறந்த சிஎஸ்கேவின் நிர்வாக இயக்குநர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.