ஜூபிலி ஹில்ஸ் வெற்றி: ராகுல், கார்கேவுடன் முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திப்பு

ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்தித்தார்.
ஜூபிலி ஹில்ஸ் வெற்றி: ராகுல், கார்கேவுடன் முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திப்பு
Published on
Updated on
1 min read

ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று சந்தித்தார்.

தில்லி ஜன்பத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நவீன் யாதவை அறிமுகம் செய்துவைத்தார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் அவரது இல்லத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்தித்தார்.

இந்த சந்திப்புகள் தொடர்பான புகைப்படங்களையும் ரேவந்த் ரெட்டி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) எம்எல்ஏவாக இருந்த மகந்தி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் மரணமடைந்தாா்.

இதன் காரணமாக இடைத்தோ்தல் நடைபெற்ற இத்தொகுதியில் ஆளும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட நவீன் யாதவ், 98,888 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். பிஆா்எஸ் வேட்பாளா் மகந்தி சுனிதா கோபிநாத்துக்கு 74,259 வாக்குகளும், பாஜக வேட்பாளா் தீபக் ரெட்டிக்கு 17,061 வாக்குகளும் கிடைத்தன.

எலான் மஸ்க் கண் இமைத்தால் ரூ. 2.6 லட்சம் சம்பளம்!

Summary

The Telangana Congress leadership and the newly elected MLA from Jubilee Hills Naveen Yadav on Saturday separately met Congress president Mallikarjun Kharge and Rahul Gandhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com