பிகார் முதல்வர் பதவியேற்பு விழா! தேஜ கூட்டணி முதல்வர்களுடன் விமரிசையாக நடத்த திட்டம்!

பிகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்கும் விழாவை விமரிசையாக நடத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டமிட்டிருப்பதாகத் தகவல்
பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார்
பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பிகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்கும் விழாவை விமரிசையாக நடத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டமிட்டுள்ளது.

பிகார் பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, பெரும்பான்மையைப் பிடித்தது. இதனையடுத்து, பிகார் முதல்வராக ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் நிதிஷ் குமாரே, மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில், முதல்வர் பதவியேற்பு விழாவை விமரிசையாக நடத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, நவம்பர் 19 அல்லது 20 ஆம் தேதியில் பாட்னாவில் பதவியேற்பு விழாவை நடத்தவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் அட்டவணைப்படி, பதவியேற்பு விழா தேதி மாற்றியமைக்கப்படலாம்.

இதையும் படிக்க: பிகார் தேர்தலில் உலக வங்கியின் ரூ. 14,000 கோடி: புள்ளிவிவரங்களுடன் பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு!

Summary

JD(U) Nitish Kumar's Swearing-In Likely On Nov 19-20, PM Modi To Attend

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com