

பிகார் தேர்தலுக்காக உலக வங்கியின் நிதியை முதல்வர் நிதிஷ் குமார் பயன்படுத்தியதாக ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிகார் தேர்தல் குறித்து செய்தியாளர்களுடன் பிரசாந்த் கிஷோர் பேசுகையில், ``இந்தத் தேர்தலின் முடிவுகள் திறம்பட விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. ஜூன் மாதம் முதல் தேர்தல் அறிவிப்பு வரையில், மக்களின் வாக்குகளை வாங்குவதற்கு நிதிஷ் குமார் அரசால் ரூ. 40,000 கோடி செலவிடப்பட்டுள்ளது.
பிகாரில் தற்போதைய பொதுக் கடன் ரூ. 4.06 லட்சம் கோடி; ஒரு நாளைக்கு வட்டி ரூ. 63 கோடி. ஆனால், பிகார் கருவூலம் தற்போது காலியாக உள்ளது.
உலக வங்கியிலிருந்து பிகாரின் வேறுசில திட்டங்களுக்காகப் பெறப்பட்ட ரூ. 21,000 கோடியிலிருந்துதான் பிகார் பெண்களுக்கு ரூ. 10,000 வழங்கப்பட்டது. தேர்தல் ஒழுக்க நெறிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாகத்தான் ரூ. 21,000 கோடியில் ரூ. 14,000 கோடி எடுக்கப்பட்டு, 1.25 கோடி பெண்களுக்கு ரூ. 10,000 தொகை விநியோகிக்கப்பட்டது.
பிகாரின் பொருளாதாரம் இவ்வளவு பெரிய தொகையை மீட்டெடுக்க முடியாது. தற்போது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, பொது நலனுக்காக செலவிட இப்போது எந்தப் பணமும் இல்லை. பொது நிதியைப் பயன்படுத்திதான், அவர்கள் மக்களின் வாக்குகளை வாங்கியுள்ளனர்.
இவையனைத்து எங்கள் தகவல், அது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், அதுவே உண்மையாக இருந்தால்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... நீதி என்பது யாதெனில்…
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.