

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் ஆரிஃப் முகமது கானிடம் இன்று(நவ. 17) வழங்கினார்.
நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மாபெரும் பலத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இந்த கூட்டணியில் அங்கம்வகித்த பாஜக 89, ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
இதையடுத்து பிகார் முதல்வராக மீண்டும் நிதீஷ் குமார் பதவியேற்கிறார். பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வருகிற நவ. 20, வியாழக்கிழமை அன்று 10-வது முறையாக பிகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்க உள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிகார் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் இன்று ராஜிநாமா செய்தார். ஆளுநர் ஆரிஃப் முகமது கானைச் சந்தித்து தனது ராஜிநாமா கடித்ததை வழங்கி, சட்டப்பேரவையைக் கலைக்க பரிந்துரைத்துள்ளார். நவ. 19 ஆம் தேதி சட்டப்பேரவை கலைக்கப்பட்டு நவ. 20ல் அவர் முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக நிதீஷ் குமார் தலைமையில் தற்போதைய ஆட்சியில் இறுதி அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.